தாய் மகன் உயிருடன் எரிப்பு: கணவன் கைது
தாய் மற்றும் மகனை வீட்டுக்குள் வைத்து பூட்டி உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவமொன்று அவிசாவளை எஹலியகொடவில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து சந்தேகத்தின் பேரில் அந்த பெண்ணின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். எஹலிய கொட பரக்கடுவே இறப்பர் தோட்டத்திலுள்ள லயன் அறையிலேயே இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தை கேள்வியுற்று உடன் விரைந்து செயற்பட்ட பிரதேசவாசிகளை கடுமையான எரிகாயங்களுடன் இருவரையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன். பொலிஸார் பெண்ணின் கணவனை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.