கள்ளக் காதலால் அயல்வீட்டு பெண்ணுடன் சேர்ந்து நஞ்சருந்திய மூன்று பிள்ளைகளின் தந்தை
கள்ளக் காதல் பிரச்சினை காரணமாக நஞ்சருந்திய காதலர்கள் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மல்லாவி, யோகபுரம் பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 38 வயதான சிவனேசன் மற்றும் 32 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நஞ்சருந்திய பெண்ணின் கணவன் சிறிது காலங்களிற்கு முன்னர் அப்பெண்ணை விட்டு பிரிந்து சென்று விட்டார். அந்தப் பெண் தனது வீட்டிற்கு அருகிலுள்ள நபருடன் நீண்ட நாட்களாக கள்ளத் தொடர்பு வைத்திருந்துள்ளார். அயலவர்கள் இதையடுத்த நிலையில் பல பிரச்சினைகளுக்கு இவர்கள் முகம் கொடுத்துள்ளனர். இந்நிலையில் நேற்றுமாலை இருவரும் நஞ்சருந்தியுள்ளனர்.