கோழி நேரடியாக குஞ்சை ஈன்ற அதிசயம்

Read Time:1 Minute, 40 Second

question_mark-002கோழிகள் முட்டையிட்டு அதனை அடைகாத்து குஞ்சு பொறிப்பதுதான் வழக்கம். ஆனால் முட்டையிடாமல் ஒரு கோழி நேரடியாக குஞ்சை ஈன்ற அதிசயம் ஆந்திராவில் நடந்துள்ளது. கிழக்கு கோதாவரி மாவட்டம் ரவுத்துலபுரம் கிராமத்தில் ரமனம்மா என்பவர் கோழி வளர்த்து வருகிறார். இவர் வளர்த்த நாட்டுக் கோழி வீட்டில் உள்ள கூடையில் முட்டையிடுவது வழக்கம்.

சம்பவத்தன்று ரமனம்மா கூடையில் இருந்த முட்டையை சேகரிக்க கோழியை விலக்கினார். அப்போது அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. கூடையில் முட்டைக்கு பதில் 2 கோழி குஞ்சுகள் கிடந்தது. முட்டைக்குப் பதில் கோழி நேரடியாக குஞ்சை ஈன்று இருந்தது. சிறிது நேரத்தில் அந்த குஞ்சு இறந்து விட்டது.

இதுபற்றி தகவல் கிராமம் முழுவதும் பரவியது. இந்த அதிசயத்தை காண கிராமமக்கள் ரமனம்மா வீட்டில் குவிந்து விட்டனர். கால்நடைத்துறை டாக்டரும் குஞ்சை பரிசோதித்தார். அவர் கூறும் போது, கோழியின் உடலில் கால்சியம், பாஸ்பரம் சத்தில்லை. இதனால் முட்டை ஓடு தயாராகவில்லை. குஞ்சு இறந்துதான் பிறந்து இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சினிமா இயக்குனர், சித்தி கொடுமை நடிகை அஞ்சலி கண்ணீர் பேட்டி: ஐதராபாத்தில் திடீர் தஞ்சம் (VIDEO)
Next post புத்தர் உருவம் கொண்ட உள்ளாடைகளை விற்றவர் கைது