மேலாடையின்றி 12 ஆயிரம் தேனிக்களுடன் நடனமாடும் மங்கை
அமெரிக்காவைச் சேர்ந்த தைரியமான பெண்ணொருவர் மேலாடையின்றி 12 ஆயிரம் தேனிக்களுடன் கடந்த 10 வருடங்களாக நடனமாடி வருகிறார். தன்னைத் தானே தேனி ராணி என அழைத்துக்கொள்ளும் சாரா என்னும் அமெரிக்க மங்கையே இவ்வாறு தேனிக்களுடன் தைரியமாக நடனமாடுகிறார். சாரா, இந்த நடனத்தை ஒரு தியானமாக எண்ணுவதாக தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தடவையும் தேனிக்களை 2 மணித்தியாலங்களுக்கு தனது உடலில் தவழச் செய்வதுடன் அவை அவரது உடலைக் கொட்டவும் அனுமதிக்கின்றார்.
தேனிக்கள் மேலாடையின்றிய அவரது உடலை மொய்கின்றது. இது மட்டுமின்றி அவரின் உடலின் கழுத்து, மார்பு கைகள் உள்ளிட்ட மேற்பாகம் முழுவதுமாக போர்த்திக் கொள்கிறது. இந்நிலையில் அந்த தேனிக்களுடன் நடனமாடுவதுடன் உண்டு பருகவும் செய்கிறார் சாரா. வலி மிகு இச்செயற்பாடு குறித்து சாரா தனது இணையத்தில் குறிப்பிடுகையில், கடந்த 10 வருடங்களாக இதனை ஒரு தியானமாக செய்து வருகிறேன்.
உடலில் தேனிக்களை தவழ விடுவது அளவுக்கதிமான வலியை ஏற்படுத்தும். ஆனால் என்னைச் சுற்றி தேன் கூடுகள் இருப்பது போல் உணருகிறேன். தேனீக்கள் எனது உடலின் சகல பாகங்களிலும் அதன் வலிமையைப் பயன்படுத்தி குத்தும். இருப்பினும் அவற்றுடன் டூயட் ஆடுவது போலவே நினைக்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.
Average Rating