இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படியிருக்கு! வாங்க பார்ப்போம்!! (08.04.2013)

Read Time:5 Minute, 4 Second

jot.Rasi_Palan
மேஷம்:
இன்று, உங்கள் பேச்சில் தத்துவத்தின் வெளிப்பாடு நிறைந்திருக்கும். நண்பர், உறவினர் பாராட்டும் வகையில் நடந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க, புதிய வழி பிறக்கும். பணவரவில் திருப்திகரமான நிலைமை உண்டு. வெகுநாள் காணாமல் தேடிய பொருள் கை வந்து சேரும்.

ரிஷபம்:
இன்று, சாந்த குணத்துடன் பேசுவீர்கள். சமூகத்தில் நன்மதிப்பு கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிக்க, அனுகூல காரணி பலம் பெறும். சராசரி பணவரவுடன் நிலுவைப் பணம் வசூலாகும். இயன்ற அளவில், அறப்பணி புரிவீர்கள்.

மிதுனம்:
இன்று, புதியவரை நண்பராக ஏற்பதில், கூடுதல் அக்கறை அவசியம். எதிர்வரும் பணிகளுக்கு, தகுந்த முன்னேற்பாடு செய்ய வேண்டும். தொழில் சிறக்க, அதிக நேரம் பணிபுரிவீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். விலை மதிப்புள்ள பொருளை கவனமுடன் பயன்படுத்தவும்.

கடகம்:
இன்று, உங்களின் எதார்த்த பேச்சு சிரமம் தரலாம். நடைமுறையில் மாற்றம் பின்பற்றுவது அவசியம். தொழில் சார்ந்த இடையூறு சரி செய்வீர்கள். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். காலமுறை உணவுப் பழக்கம் உடல்நலம் பாதுகாக்கும்.

சிம்மம்:
இன்று, கலகலப்பாக பேசி, பிறர் மனம் கவருவீர்கள். செயல்களில் எளிதான வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரத் தொடர்பு பலம் பெறும். பணப் பரிவர்த்தனையில் முன்னேற்றம் உண்டு. இல்லறத் துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

கன்னி:
இன்று, உங்களுக்கு எதிரான செயல்களை, புதிய யுக்தியுடன் மாற்றுவீர்கள். எதிர்கால வாழ்வில் நம்பிக்கை வளரும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். உறவினர் வருகையால், குடும்பத்தில் மகிழ்ச்சி வளரும். உத்தியோகஸ்தருக்கு தாமதமான சலுகைப் பயன் எளிதில் கிடைக்கும்.

துலாம்:
இன்று, மனதில் விரக்தியுடன் உணர்ச்சி வசப்படுகிற சூழ்நிலை ஏற்படலாம். தெய்வ நம்பிக்கையுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபார நடைமுறை சராசரி அளவில் இயங்கும். அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத் திட்டத்தில் மாறுதல் செய்வீர்கள்.

விருச்சிகம்:
இன்று, முக்கியமான பணி நிறைவேறுவதில் தாமதம் இருக்கும். மனஅமைதியை பாதுகாப்பது நல்லது. தொழில் நடைமுறை சீராக, நண்பர் ஓரளவு உதவுவர். பணவரவு சிக்கன செலவுக்கு பயன்படும். இயந்திர தொழிற்சாலை பணியாளர், பாதுகாப்பு விதிகளை கவனமுடன் பின்பற்ற வேண்டும்.

தனுசு:
இன்று, உங்கள் பேச்சில் அன்பும், பண்பும் கலந்திருக்கும். சிரமம் தந்த ஒரு செயல் எளிதாக நிறைவேறும். தொழில் வளர கூடுதல் பணிபுரிவீர்கள் உபரிபண வருமானம் கிடைக்கும். பெற்றோரின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

மகரம்:
இன்று, பிறரை விமர்சிக்க, சிலர் உங்களை கருவியாக பயன்படுத்துவர். சூழ்நிலை உணர்ந்து விலகுவது நல்லது. தொழில், வியாபாரம் தாமதகதியில் இயங்கும். அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும்.

கும்பம்:
இன்று, உங்கள் செயல்களை நேர்த்தியுடன் நிறைவேற்றுவீர்கள். மனதில் பெருமிதம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாகும். பணப்பரிவர்த்தனை முன்னேற்றம் பெறும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.

மீனம்:
இன்று, நீங்கள் தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரலாம். உங்களை அறியாதவரிடம் சொந்த விஷயம் பேச வேண்டாம். தொழிலில் உள்ள அனுகூலத் தன்மை பாதுகாப்பது நல்லது. முக்கிய தேவைக்கு சேமிப்பு பணம் செலவாகும். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மிதிவெடியில் சிக்கி பணியாளர் பலி
Next post இந்தியாவிலிருந்து ஆஸி செல்ல முயன்றவர்களுக்கு விளக்கமறியல்