நாகபாம்பு பெண் நாட்டை விட்டு தப்பியோட்டம்

Read Time:1 Minute, 51 Second

snaga-pampu-girlநாகபாம்பு பெண்ணான நிரோசா விமலரட்ன அல்லது டிலானி என அழைக்கப்படும் பெண்ணை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிடுமாறு பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. நாகபாம்பு பெண் நீதிமன்றத்தில் ஆஜராகாமையினால் அவருக்கு எதிரான பிடியாணை உத்தரவை கொழும்பு கோட்டை நீதிமன்றம் கடந்த 04ம் திகதி பிறப்பித்தது.

சந்தேகநபரான நிரோசா விமலரட்ன அல்லது டிலானி என அழைக்கப்படும் இப்பெண் கடந்த 04ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்நிலையில் அவர் இருக்கின்ற இடத்தையோ இன்றேல் அவருடைய நிரந்தர முகவரியையோ தம்மால் தேடியறிந்து கொள்ள முடியவில்லை என நீதிமன்றத்தின் கவனத்திற்கு இன்று கொண்டு வந்த கொள்ளுப்பிட்டி பொலிஸார் அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்று விட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

அவரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய வேண்டுமாயின் பிடியாணையின் பிரதியை விமானநிலைய பொலிஸாரிடம் கையளிக்குமாறு நீதவான் கேட்டுக்கொண்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியாவிலிருந்து ஆஸி செல்ல முயன்றவர்களுக்கு விளக்கமறியல்
Next post ஆஸியில் இலங்கையர்கள் உண்ணாவிரதப் போராட்டம்