16-ந் தேதி நடக்கும் இலங்கை தமிழர்கள் ஆதரவு போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்பு

Read Time:2 Minute, 1 Second

Vaiko01.jpgம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கையில் உள்ள உண்மை நிலையை இலங் கைத்தமிழர்கள் படுகின்ற துன்பங்களை தமிழ் மக்களு டைய உணர்வுகளை நேரடியாக விருப்பு வெறுப்பு இன்றிக் கண்டு அறிவதற்கு இந்தியாவில் இருந்து அனைத் துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அனுப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும், அதுபோல இலங் கையில் தமிழ் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இந்தியா வருவதற்கும், இந்தியாவில் பிரதமரையும், மத்திய அரசின் பிரதிநிதிகளையும் சந்திப்பதற்கும் உடனடியாக வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக் கையையும் வலியுறுத்தி, அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் வருகிற 16-ம் தேதி மாலை 4.00 மணிக்கு தமிழகமெங்கும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கிறது. மதுரையில் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொள்கின்றேன். அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில், மாவட்ட செயலாளர்களும், கழக முன்னணியினரும் பங்கேற்கிறார்கள். ம.தி.மு.கழகத் தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மீது துப்பாக்கிச்சுடு
Next post அமெரிக்காவை மீண்டும் மிரட்டும் புயல்