பெருவில் ஹெலிகொப்டர் விபத்து
பெருவில் வடகிழக்கில் உள்ள வனப்பகுதிக்கு 13 பேரை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியாகியுள்ளனர்.
அமேசன் வனப்பகுதியில் ஈகுவடார் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள லோரேடோ நகரின் மீது பறந்த போது ஹெலிகொப்டர் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து தரையில் வீழ்ந்து நொறுங்கியதிலே அனைவரும் பலியாகியுள்ளனர்.
தகவல் அறிந்ததும் பெரு நாட்டின் இராணுவ வீரர்கள் 2 ஹெலிகொப்டரில் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இது பெரு நாட்டில் இந்த ஆண்டில் நடைபெறும் 2ஆவது ஹெலிகொப்டர் விபத்து ஆகும்.