அனைத்து திரைப்படங்களையும் தடை செய்ய வேண்டும்
தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் அனைத்து திரைப்படங்களையும் தடை செய்ய வேண்டுமெனக் கோரி ராவணா சக்தி என்ற அமைப்பினால் மகஜரொன்று இலங்கை திரைப்படப் கூட்டுத்தாபன அதிகாரி ஒருவரிடம் கையளிக்கப்பட்டது.
அண்மையில் இலங்கைக்கு எதிராக தமிழ் திரைப்பட நடிகர், நடிகைகள் தமிழகத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அதனை கண்டிக்கும் வண்ணம் செவ்வாய்க்கிழமை குறித்த அமைப்பினால் தமிழ் நாட்டில் இருந்து வெளியாகும் அனைத்து திரைப்படங்களையும் இலங்கையில் திரையிட வேண்டாமெனக் கோரி மேற்படி மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.