கங்ணம் ஸ்டைல் பாடல் மூலம் உலகை கலக்கிய தென்­கொ­ரிய பாட­க­ரான ஷை, தனது புதிய பாட­லொன்றை வெளி­யி­ட­வுள்ளார்

Read Time:2 Minute, 24 Second

508psyகங்ணம் ஸ்டைல் பாடல் மூலம் உலகை கலக்கிய தென்­கொ­ரிய பாட­க­ரான ஷை, தனது புதிய பாட­லொன்றை வெளி­யி­ட­வுள்ளார். நாளை மறு­தினம் வெள்­ளிக்­கி­ழமை இப்­பாடல் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது.

35 வய­தான ஷையின் உண்­மை­யான பெயர் பார்க் ஜே சாங் ஆகும். கடந்த வருடம் ஜூலை மாதம் அவர் கங்ணம் ஸ்டைல் பாடலை வெளி­யிட்டார். அப்­பா­டலும் அப்­பா­ட­லுக்கு ஆடிய நட­னமும் உல­கெங்கும் பிர­ப­ல­மா­னது. யூரியூப் இணை­யத்­த­ளத்தில் 150 கோடி தட­வை­க­ளுக்கு மேல் அப்­பா­டல்­ வீ­டியோ பார்­வை­யி­டப்­பட்­டுள்­ளது.

ஆமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா, ஐ.நா.செய­லாளர் நாயகம் பான் கீ மூன் உட்­பட உலகப் புகழ்­பெற்ற வி.வி.ஐ.பிகள் கூட பகி­ரங்­க­மாக கங்­கணம் ஸ்டைல் போஸ்­கொ­டுத்­துள்­ளனர். தனது மகள்­களை மகிழ்­விப்­ப­தற்­காக தான் கங்ணம் ஸ்டைல் நடனம் ஆடி­ய­தாக பராக் ஒபா­மாவே ஒப்­புக்­கொண்­டி­ருந்தார்.

இந்­நி­லையில் அவரின் புதிய பாடல் நாளை மறு­தினம் வெளி­யா­க­வுள்­ளது. இப்­பா­ட­லுக்கு ஜென்­டில்மேன் என பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.

ஜென்­டில்மேன் பாட­லுக்­காக புதிய நட­மொன்­றையும். ஷை ஆடி­யுள்­ளாராம் ஷை. ஏப்ரல் 13 ஆம் திகதி, நடை­பெ­ற­வுள்ள நிகழ்ச்­சி­யொன்றில் முதல் தட­வை­யாக இந்­ந­ட­னத்தை ரசி­கர்கள் முன் அவர் ஆட­வுள்ளார்.

“இந்த பாடல் மிக வேடிக்­கை­யா­னது. இப்­பா­டலின் தலைப்பு ஜென்­டில்மேன். அதன் நடனம் குறித்து நான் இப்­போது கூற­மு­டி­யாது. கொரிய மக்­க­ளுக்கு இந்த நடனம் தெரியும். ஆனால் ஏனைய நாடுகளில் உள்ளவர்கள் இதை பார்த்திருக்க மாட்டார்கள்” என தொலைக்காட்சி செவ்வியொன்றில் ஷை கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசுக்கு எதிராக முல்லையில் மக்கள் ஆர்ப்பாட்டம்
Next post விபத்தொன்றில் சிக்கி சினிமா நடிகர் ஒருவர் மரணம்