மனைவியின் பிரசவத்தை வீடியோ எடுக்கும் முயற்சியில் இளவரசர் வில்லியம்ஸ்
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் தனது மனைவி கேட்டின் பிரசவத்தை வீடியோ எடுக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இளவரசர் வில்லியம்ஸ் கேட் மிடில்டன் திருமணம் 2011ம் ஆண்டு நடைபெற்றது. கேட் மிடில்டன் தற்போது 6மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில், தனது வாரிசு இந்த பூமியில் பிறக்கும் இனிய தருணத்தை வீடியோவில் படம் எடுக்க இளவரசர் வில்லியம்ஸ் திட்டமிட்டுள்ளார். இளவரசரின் இந்த விநோத ஆசைக்கு இளவரசி மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரசவ வீடியோ, சமூக விரோதிகளின் கையில் கிடைத்து அந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி விடக்கூடாது என கேட் மிடில்டன் அச்சப்படுவதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், பிரசவத்திற்கு முன்னர் மனைவியின் எண்ணத்தை மாற்றி வீடியோ எடுத்தே தீருவது என்ற முடிவில் வில்லியம்ஸ் தீர்மானமாக உள்ளதாக அவரது நெருங்கிய நண்பர்கள் கூறுகின்றனர்.
Average Rating