கனடாவில் நான்கு மர்மப் பெண்கள், 19 வயது இளைஞனை காரில் கடத்தி சென்று பாலியல் வல்லுறவு
கனடாவில் 30 முதல் 36 வயது வரை உள்ள நான்கு மர்மப் பெண்கள், ஒரு இரவு விடுதியில் இருந்த 19 வயது இளைஞனை காரில் கடத்தி சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய விநோத சம்பவம் டொரண்டோ பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
குற்றவாளிகளான நான்கு பெண்களை டொரண்டோ பொலிஸார் வலைவீசி தேடிவருகின்றனர்.
டொரண்டோவின் இரவு விடுதிக்கு சனிக்கிழமை இரவு 19 வயது இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அவரிடம் பேச்சு கொடுத்த நான்கு பெண்கள் தங்களுடன் காரில் வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.
அவர் மறுத்த போதிலும் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி, ஒரு வீட்டிற்கு அழைத்து சென்று நான்கு பெண்களும் இளைஞனை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் தங்களுடைய காரில் ஏறி மாயமாக மறைந்துவிட்டனர்.
பாதிக்கப்பட்ட இளைஞர் டொரண்டோ பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் பேரில், நான்கு பெண்களையும் பொலிஸார் பிடிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
நான்கு பெண்களும் சுமார் 30 முதல் 36 வயது வரை உள்ளவர்கள் என்றும், அனைவரும் 5 அடி 4 அங்குலம் உயரம் உள்ளவர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த நான்கு பெண்களை பற்றிய ஏதேனும் விபரங்கள் தெரிந்தால் உடனே டொரண்டோ பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.