இன்றைய ராசிபலன்கள்: 13.04.2013

Read Time:8 Minute, 46 Second

jot.thinapalan
மேஷம்
காலை 8 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கொஞ்சம் அசதி இருக்கும். பிற்பகல் முதல் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பணவரவு சீராக இருக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சியுண்டு. வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், பிங்க்

ரிஷபம்
காலை 8 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒருவித பயம், படபடப்பு வந்துச் செல்லும். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ப்ரவுன்

மிதுனம்
டுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள்-. உடல் நலத்தில் கவனம் தேவை. யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, பச்சை

கடகம்
குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்திற்காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பீர்கள். வாகனத்தை சீர்செய்வீர்கள். உத்தியோகத்தில் வேலைசுமை குறையும். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுண்டு. ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ப்ரவுன்

சிம்மம்
இன்று தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பிள்ளைகளின் கோபம், அலட்சியப் போக்கு மாறும். பழைய நினைவுகள் நெஞ்சில் நிழலாடும். உறவினர்கள், நண்பர்கள் மதிப்பார்கள். பணப்பற்றாக்குறை நீங்கும். வியாபரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். வீண் அலைச்சல் நீங்கும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ஆரஞ்சு

கன்னி
காலை 8 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. பிற்பகல் முதல் எடுத்த வேலையை தடையின்றி முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அனபுத் தொல்லைகள் விலகும். பயணங்களால் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, மஞ்சள்

துலாம்
காலை 8 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் மறைமுகப் பிரச்னைகள் வந்துச் செல்லும். உத்தியோகத்தில் மேலதிகாரி குறைக்கூறுவார். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா

விருச்சிகம்
இன்று சொன்ன சொல்லைக் காப்பாற்ற அதிரடியாக செயல்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடல் நலம் சீராகும். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. பிரியமானவர்களைச் சந்தித்து மகிழுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக நடந்துக் கொள்வார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், கருநீலம்

தனுசு
சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அரசாங்க காரியங்களிலிருந்த பின்னடைவு நீங்கும். வயிற்றுவலி, மனஉளைச்சல் நீங்கும். விடாப்பிடியாக செயல்பட்டு பணிகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் நம்பிக்கைக் குறியவர்களின் ஆலோசனையை ஏற்பீர்கள். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிரே

மகரம்
இன்று வியாபாரத்தில் சுமுகமான லாபம் உண்டு. கணவன் -மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். முன்கோபம், டென்ஷன் விலகும். எடுத்த காரியங்களை முடிக்கமுடியாமல் அவதிப்பட்ட நிலை மாறும். தந்தையின் உடல் நிலை சீராகும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். அண்டை வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, மஞ்சள்

கும்பம்
இன்று மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சர்யப் படுத்துவீர்கள். கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். ஆடம்பரச்செலவுகளை குறைப்பீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய சரக்குகளை புது யுக்தியால் விற்றுத்தீர்ப்பீர்கள். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். வாகனத்தை சீர்செய்வீர்கள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, இளஞ்சிவப்பு

மீனம்
குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். பிள்ளைகளின் உடல் நிலை சீராக இருக்கும். காசுபணம் தேவையான அளவு இருக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவிர்கள். குலதெய்வப் பிராத்தனை களை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : மயில் நீலம், ப்ரவுன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாழ்க்கையில் நிகழும் உண்மை சம்பவங்கள் – மீண்டும் பிறந்த மகள்!
Next post பிரபாகரன்,சூசை தற்கொலை செய்துக் கொள்ளவில்லை: பொன்சேகா