பிரபாகரன்,சூசை தற்கொலை செய்துக் கொள்ளவில்லை: பொன்சேகா
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் கடற்புலிகளின் தளபதி சூசை தற்கொலை செய்துக்கொள்ளவில்லை அவர்கள் இருவரும் யுத்தத்தின் இறுதிக்கட்டத்திலே கொல்லப்பட்டனர் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.
அவ்விருவரும் தற்கொலைச் செய்து கொண்டதாக ஊடகங்களில் வெளியான தகவல்களையும் அவர் நிராகரித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில்; பிரபாகரன் மற்றும் 100 போராளிகளுடன் சூசையும் இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டார்.
பிரபாகரன் மற்றும் சூசையின் குண்டுதுளைத்த உடல்களை நாம் கண்டெடுத்தோம்.அவர் கடைசிவரை போராடியே மரணமானார் என்பதை வெளிப்படுத்தும் ஆதாரங்கள் எமக்கு கிடைத்தன.பிரபாகரனும், சூசையும் சயனைட் உட்கோள்ளவோ, தற்கொலை செய்து கொள்ளவோ இல்லை. அத்துடன். புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டுஅம்மானின் மனைவி தற்கொலை செய்து கொண்டிருந்தார்.