இன்றைய ராசிபலன்கள்: 14.04.2013

Read Time:8 Minute, 42 Second

jot.raasipalangal
மேஷம்
அடிமனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். அலைச்சல் தந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் அனுசரித்து போவீர்கள். பணவரவு திருப்தி தரும். உடல் நிலை சீராகும். வெளிவட்டாரம் மகிழ்ச்சி தரும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வாகனப்பழுது நீங்கும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, பச்சை

ரிஷபம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்துச் செல்லும். யாரையும் முழுமையாக நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். அடுத்தவர்களின் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : பிங்க், க்ரீம் வெள்ளை

மிதுனம்
எதிர்காலம் குறித்த பயம், வீண் கவலைகள் வந்துச் செல்லும். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தா பச்சை, மஞ்சள்

கடகம்
இன்று உங்களின் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் அடிமனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்விர்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பு கிட்டும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் சந்தோஷம் கிட்டும். வேற்று மதத்தினரால் உதவி கிடைக்கும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், வெள்ளை

சிம்மம்
அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். வியாபாரத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகவாதிகளின் சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : மயில்நீலம், பிங்க்

கன்னி
முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ்பச்சை, ரோஸ்

துலாம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் பல வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களால் பிரச்னைகள் வந்துப் போகும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். கணுக்கால் வலிக்கும். உங்களை குறைக் கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை

விருச்சிகம்
இன்று பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வருங்காலத்திற்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களின் அதரவு கிட்டும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலைக் காணப்படும். தாய்வழி உறவினர்களால் இருந்துவந்த மனக்கசப்புகள் விலகும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : அடர்சிவப்பு, கிரே

தனுசு
இன்று தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். சகோதரவகையில் மகிழ்ச்சி தங்கும். அம்மாவின் உடல் நிலை சீராகும். உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், வைலெட்

மகரம்
இன்று மனக்குழப்பங்கள் விலகும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். கன்னிப்பெண்களுக்கு உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அரசாங்க வேலைகள் சுமுகமாக முடியும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா

கும்பம்
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பணப்பற்றாகுறை விலகும். மனதிற்குப்பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தாயின் உடல் நலம் சீராகும். பிள்ளைகளை நல்வழிப்படுத்து வீர்கள். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பகர்களின் வருகையுண்டு. ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : இளஞ்சிவப்பு, பிங்க்

மீனம்
நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப் படுவீர்கள். கணவ -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் நன்மை பிறக்கும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகளை விரைந்து வசூலிப்பீர்கள். தாயாரின் உடல்நிலை சீராக இருக்கும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், வெளிர் நீலம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்”
Next post நம்மூர் கட்டைகள்… ஹும் .. செம கட்டைகள்!!! (PHOTOS)