இன்றைய ராசிபலன்கள்: 15.04.2013

Read Time:8 Minute, 52 Second

raasipalan-007
மேஷம்
இன்று சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படை வீர்கள். சிந்தனைத்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப் பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல் நலம் சீராக இருக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களைச் சந்திப்பீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலைக் காணப்படும். மாணவர்கள் பரபரப்புடன் காணப்படுவார்கள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, இளஞ்சிவப்பு

ரிஷபம்
இன்று இரவு 7. 15 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிளிப்பச்சை

மிதுனம்
குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். வியாபாரத்தில் சுமாரான லாபம் வரும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். இரவு 7. 15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானித்து செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ஊதா

கடகம்
துடிப்புடன் காணப்படுவீர்கள். எதிரிகளின் கொட்டம் அடங்கும். கணவன் -மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. விருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் மதிக்கப்படுவீர்கள். முன்கோபம் குறையும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தாயாரின் நீண்டநாள் கோரிக்கைகளை பூர்த்தி செய்வீர்கள். கன்னிப்பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், வெளீர்நீலம்

சிம்மம்
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். குடும்பத்தினருடன் இருந்துவந்த கசப்புணர்வு நீங்கும். கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஒத்துழைப்பு உண்டு. வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். கன்னிப்பெண்களுக்கு கனவுத்தொல்லை, தூக்கமின்மை நீங்கும். மாணவர்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : மிண்ட்கிரே, வைலெட்

கன்னி
பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வாகனச் செலவுகள் நீங்கும். மாணவர்களின் நினைவாற்றல் பெருகும். கன்னிப்பெண்களுக்கு கல்யாணப்பேச்சு வார்த்தைகள் முன்னேற்றம் தருவதாக அமையும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, நீலம்

துலாம்
இரவு 7. 15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, கிரே

விருச்சிகம்
கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவிவழி உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். இரவு 7. 15 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்லும் நாள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிளிப் பச்சை

தனுசு
மனக்குழப்பங்கள் நீங்கும். நம்பிக்கைக்குறியவர்களின் ஆதரவு கிட்டு. தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கோபம் குறையும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். கன்னிப்பெண்களுக்கு காதல் கைகூடும். வயிற்றுவலி, கனவுத்தொல்லை நீங்கும். மாணவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : வெளிர் மஞ்சள், ப்ரவுன்

மகரம்
இன்று அதிரடியாக செயல்பட்டு சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பணவரவு உண்டு. வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசாங்க காரியங்களில் வெற்றியுண்டு. மாணவர்களின் சிந்தனைத்திறன் அதிகரிக்கும். தாயின் உடல்நிலை சீராகும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ் பச்சை, வெள்ளை

கும்பம்
இரண்டுமூன்று நாட்களாக முடியாமல் இழுத்தடித்த காரியங்களெல்லாம் இனி முடிவுக்கு வரும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் நீண்டாநாள் கோரிக்கைகளை பூர்த்தி செய்வீர்கள். அரசாங்க வேலைகளில் அனுகூலமான நிலைக் காணப்படும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

மீனம்
இன்று மன உளைச்சல் நீங்கும். கலகலப்பாக சிரித்துப்பேசும் சூழல் அமையும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வானபழுது நீங்கும். தாய்வழி உறவினர்களால் மகிழ்ச்சியுண்டு. நட்பு வட்டம் விரியும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். மாணவர்களின் நினைவாற்றல் பெருகும். முன்கோபம் விலகும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, ரோஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கழிவு குழிக்குள் விழுந்து 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!
Next post ரயில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வெளியில் வீசபட்டார்!