லொறிக்குள் நசுங்குண்டு நான்கரை வயது சிறுமி பலி
வலஸ்முள்ள, அத்கேந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கரை வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வீடொன்றிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி பின்நோக்கி தள்ளப்பட்ட போது சிறுமி பின்புறம் இருந்த சிறுமி அதற்குள் நசுங்குண்டு படுகாயடைந்துள்ளார்.
அதன் பின்னர் வலஸ்முள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி பின்னர் உயிரிழந்துள்ளார்.
ஹக்மன, கரவல்பிட்ட வடக்கு பகுதியைச் சேர்ந்த சிறுமி பெற்றோருடன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த வேளை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வலஸ்முள்ள பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.