உள்ளாடை தெரியும்படி காற்சட்டை அணிவது குற்றம்

Read Time:1 Minute, 51 Second

aa00013அமெரிக்காவின் லூசியானா மாநில அரசு உள்ளாடை தெரியும் விதமாக காற்சட்டை அணிவதை சட்டத்திற்கு புறம்பான செயலாக மாற்றியமைத்துள்ளதுடதுடன் மீறி அணிந்தால் அபராதம் விதிக்கவும் சட்டமாக்கியுள்ளது. தற்கால இளைஞர்கள் தங்களது உள்ளாடை தெரியும் விதமாக காற்சட்டை அணிவது சமூகம் சார் பிரச்சினைகளை ஏற்படுத்தும் ஒன்றென இனங்காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவ்வாறு காற்சட்டை அணிபவர்களுக்கெதரிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்க லூசியான மாநில அரசு தீர்மானித்துள்ளது. தற்போது இதனை உறுதிசெய்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இத்தடையினை பலரும் வரவேற்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இனி அங்கு கீழிறக்கப்பட்ட காற்சட்டை அணிபவருக்கு முதல் தடவை மாட்டினால் 50 அமெரிக்க டொலர்களும் இரண்டாவது தடவை மாட்டினால் 100 அமெரிக்க டொலர்கள் அபரதாம் விதிக்கப்படும்.

அதன் பின்னர் மாட்டிக் கொண்டால் நீதிபதியின் தீர்மானத்திற்கேற்ப ஆகக் குறைந்தது 100 அமெரிக்க டொலர்களும் 16 மணி நேர சமூக சேவைகள் செய்யவும் தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலும் தற்போது இளைஞர்களும், யுவதிகளும் உள்ளாடை தெரியும்படி ஆடைகளை அணிவதை ஆடம்பரமாக கொண்டுள்ளனர்.

aa00013

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாயைக் குறை கூற அவசர பொலிஸாரை அழைத்த மகன் கைது
Next post காலி கடற்கரையில் பணம் கொள்ளை இருவர் கைது