காலி கடற்கரையில் பணம் கொள்ளை இருவர் கைது
கடற்கரையை அவசர மலசலகூடமாக பயன்படுத்திய ஒருவர் 196,000 ரூபாவை பறிகொடுத்த சம்பவமொன்று காலியில் இடம்பெற்றுள்ளது. காலி தங்கெதர என்னும் இடத்தைச் சேர்ந்த வியாபாரியான இவர் கடந்த 14ம் திகதி புதுவருட வியாபாரத்திலிருந்து கிடைத்த பணத்தை காலி நகரிலுள்ள வங்கியொன்றில் வைப்பிலிட வந்த போதே சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவர் காலியிலிருந்த போது அவசரமாக இயற்கைக் கடமையை நிறைவேற்றுவதற்காக கடற்கரைக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், இவர் தனது காற்சட்டையை பாறையொன்றின் மீது வைத்து விட்டு சென்ற போது காற்சட்டைப் பையிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப் பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.