அவுஸ்திரேலியா சென்றடைந்த 66 இலங்கையர்கள், அகதி அந்தஸ்துக்கு தகுதியானவர்களா?
ஒன்றரை மாத கடற்பயணத்தின் முடிவில் கடந்தவாரம் அவுஸ்திரேலியா ஜெரால்டன் துறைமுகத்தை சென்றடைந்த 66 இலங்கையர்கள், அகதி அந்தஸ்துக்கு தகுதியானவர்களா என்பதை விரைவில் அறிவிக்கப் போவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்திருக்கிறது.
இவர்களில் எத்தனைபேர் அகதி அந்தஸ்துக்கு தகுதியானவர்களாவார்கள் என்பதை வெகுவிரைவில் அரசு அறிவிக்கும் என்று அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரெண்டன் ஓ கோனர் புதனன்று தெரிவித்திருக்கிறார்.