சிறுமிமீது பாலியல் துஷ்பிரயோகம், இளைஞன் கைது
சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 18 வயதுடைய இளைஞர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சிறுமியின் அக்காவின் கணவரின் சகோதரினாலேயே நாவற்குழியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு சந்தேகநபரை சாவகச்சேரி நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்செய்துள்ளனர்.