இறந்து பிறந்த குழந்தையை புதைத்த பெண் கைது
கம்பஹா மாவட்டம் வெயாங்கொட தேவபொல பிரதேச வீடொன்றுக்கு அருகில் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட நிலையில் சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டில் வசித்துவரும் 27 வயதுடைய பெண் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஏப்ரல் 18ம் திகதி மாலை தான் இந்தக் குழந்தையை பெற்றெடுத்ததாகவும் பிறக்கும் போதே குழந்தை இறந்து காணப்பட்டதால் குழி தோண்டி புதைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சடலம் நீதவான் விசாரணைக்காக குறித்த இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. வெயாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.