அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 80பேர் முனையில் கைது
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு முயற்சி செய்த 80 பேரை பருத்திதுறை முனைப் பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் இவ்வாறு அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு முயற்சித்த வேளையிலேயே இவர்களை இன்றுகாலை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ள கடற்படையினர் அவர்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.