உணவு எதுவுமின்றி 4 நாட்களாக லிப்டில் மாட்டிக்கொண்ட ஹோட்டல் முதலாளி

Read Time:2 Minute, 12 Second

555liftஹோட்டல் முதலாளி ஒருவர் நீர் மற்றும் உணவு எதுவுமின்றி 4 நாட்களாக லிப்டில் மாட்டிக்கொண்ட சம்பவமொன்று அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது. ஸ்வீடனைச் சேர்ந்த தோமஸ் பிளீட்வூட் என்ற நபரே இவ்வாறு லிப்டில் மாட்டிக் கொண்டுள்ளார்.

குறித்த நபர் அவுஸ்திரேலியாவின் ஈடன் நகரிலுள்ள அவரது ஹோட்டலில் யாரும் இல்லாத வேளையில் ஒருவர் மட்டும் பயணிக்கக்கூடிய லிப்டில் மேல் தளத்திலிருந்து கீழ் தளத்திற்கு வந்துள்ளார். இதன்போது லிப்டின் இயக்கம் தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது கையடக்கத் தொலைபேசியையும் கொண்டு செல்ல மறந்துள்ளார். இதனால் ஹோட்டலிலும் யாரும் இல்லாததால் அவரால் எந்த உதவியையும் தோமஸினால் பெறமுடியவில்லை.

ஆனால் சமயோசிதமாக செயற்பட்ட தோமஸ் 4 நாட்களாக போராடியுள்ளார். சுவாசிப்பதற்கு தேவையான கற்றை லிப்டிலிருந்த கண்ணாடியை உடைத்து பெற்றுக் கொண்டுள்ளார். இவர் மாட்டிக் கொண்டு 4ஆவது நாளிலேயே எதிர்பாராத விதமாக அவரது நண்பருக்கு ஹோட்டலில் ஏதோ அசம்பாவிதம் இடம்பெறுவதை உணர்ந்து தீயணைப்பு படையின் உதவியை நாடி தோமஸை மீட்டுள்ளார்.

இது குறித்து தோமஸ் கூறுகையில், அதற்கு முதல் அந்த லிப்ட் இவ்வாறு பழுதடைந்ததில்லை. எனவே இதனை நான் எதிர்பார்க்கவில்லை. உணவு மற்றும் நீர் எதுவுமின்றி லிப்டில் போராடியதற்கு நான் பெற்றுக்கொண்ட இராணுவ பயிற்சியே காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொட்டடியில் இரு இளைஞர்கள் மீது இனந்தெரியாத குழு தாக்குதல்
Next post இன்றைய ராசிபலன்கள்: 22.04.2013