55 வயது பெண் மீது பாலியல் வல்லுறவு
புதுவருட தினத்தன்று தனது தாய்க்கு உணவு கொடுத்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 55வயது பெண்ணைத் தாக்கி பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இளைஞனை நாளை வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுவருட தினத்தன்று தனது தாய்க்கு உணவு கொடுத்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 55 வயதுப் பெண்ணைத் தாக்கி காயப்படுத்தி விட்டு பாலியல் வல்லுறவுக் குட்படுத்திய இளைஞனை கம்பளை மாவட்ட பதில் நீதிவான் தீப்தி வணிகசேகர மன்னால் ஆஜர் செய்த போது இளைஞனை நாளை வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
வெட்டகேதெனிய கிராம சேவகர் பிரிவில் இந்த 55 வயதுப் பெண் தனது தாய்க்கு இரவு உணவை கொடுத்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போதே அவரைத் தாக்கி காயப்படுத்தி பாலியல் வல்லுறவுக் குட்படுத்தியுள்ளதாக கம்பளை பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.