அமெரிக்க அதிகாரிகள் யாழ். குடாநாட்டிற்கு விஜயம்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்கள ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான குழு யாழ் குடாநாட்டிற்கு விஜயம் செய்துள்ளது. நேற்றுப்பகல் அங்கு விஜயம் செய்த இக்குழுவினர் யாழ்.மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியோரை சந்தித்து தற்போதைய நிலவரம் குறித்து அறிந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் உதயன் அலுவலகத்திற்கும் இக்குழுவினர் நேற்று விஜயம் செய்துள்ளனர். இவர்கள் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடுவர் என தெரிவிக்கப்படுகின்றது.