சுவிஸ்லாந்து பிரஜை ஹப்புத்தளையில் மரணம்
சுவிட்சர்லாந்திலிருந்து பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளைக்கு வந்திருந்த உல்லாசப்பயணி ஒருவர் ஹப்புத்தளையில் தான் தங்கியிருந்த ஹோட்டலில மயங்கி விழுந்து மரணமாகியுள்ளார். சம்பவ தினமான திங்கட்கிழமை காலை உணவை உட்கொண்டதன் பின்னரே மயங்கி வீழ்ந்ததாக கூறப்படுகிறது.
மனைவியுடன் வருகைதந்திருந்த மேற்படி நாட்டைச் சேர்ந்த விலிஸ்வர் (வயது 83) என்ற நபரே உயிரிழந்தவராவார். உல்லாசப் பயணிகளாக வந்திருந்த மேற்படி தம்பதியர் ஹப்புத்தளை ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாக ஹப்புத்தளை பொலிசார் தெரிவித்துள்ளனர். விசாரணைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.