நடிகர் கமலஹாசன் இளைஞர்களிடையே பாலியல் ஆசையை தூண்டியதாக, இந்து மக்கள் கட்சி பொலிஸில் புகார்

Read Time:4 Minute, 24 Second

Ind.vis-2அண்மையில் ஒளிபரப்பான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் நாட்டில் பாலியல் பலாத்காரத்திற்கு தூண்டு கோலாக இருந்ததாகவும் இதுபோன்ற நிகழ்ச்சிகள்யில் மூலம் இந்திய கலாச்சாரத்தையே சீர்குலைப்பது போன்று நடந்து கொண்டதாகவும் கூறி கமல், கவுதமி, பிரகாஷ்ராஜ், திவ்யதர்ஷினி மற்றும் விஜய் டிவிமீது இந்து மக்கள் கட்சி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளது.

இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் குமார் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து. விஜய் டிவி மீது புகார் அளித்தார்.

அந்த புகார் மனுவில், தமிழகத்தில் மக்கள் அதிகம் பார்க்கக் கூடிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியில் நடிகர் பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கும் நீங்களும் வெல்லலாம் என்ற பொது அறிவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கடந்த 15,16,17ம் தேதிகளில் ஒளிப்பரப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன், நடிகைகள் கவுதமி, திவ்யதர்ஷினி மற்றும் குடும்ப பெண்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடும்ப பெண்களிடம் நடிகர் கமலஹாசன் பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் நடிகர் பிரகாஷ்ராஜ், ஒரு நடுத்தர வயது பெண்மணியை பார்த்து, உங்களுக்கு நடிகர் கமலஹாசனை பிடிக்குமா என்று கேட்கிறார். அதற்கு அந்த நடுத்தர வயது பெண்மணி, எனக்கு வெறித்தனமாக பிடிக்கும் என்கிறார்.

மீண்டும் உங்களுக்கு நிறைவேறாத ஆசைகள் என்ற கேள்விக்கு பதிலளித்த அந்த பெண்மணி, கமலை கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டும் என்கிறார் அதுபோலும், லட்சக்கணக்கான மக்கள், குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசனை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கிறார்.

அதுபோல் நடிகை திவ்யதர்ஷினியும், எனக்கும் அந்த ஆசை இருக்கிறது என தெரிவித்து, கமலை கட்டிப் பிடித்து முத்தமிடுகிறார்.

மேலும் அந்த நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தினால் என்ன தவறு இருக்கிறது என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது.

பொது அறிவு நிகழ்ச்சி என்று அறிவிக்கப்பட்டு ஒளிபரப்படும் நிகழ்ச்சியில் ஒரு ஆணை அடுத்தவர் வீட்டு மனைவி அல்லது பெண்கள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது தான் இந்திய நாட்டு கலாச்சாரமா? நாட்டில் பெருகி வரும் பாலியல் பலாத்காரத்திற்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் தூண்டுகோலாக இருந்து வருகின்றன.

எனவே அன்றைய நிகழ்ச்சிகளில் இந்திய நாட்டு கலாச்சாரத்தை சீரழித்த குற்றத்திற்காக நடிகர்கள் கமலஹாசன், பிரகாஷ்ராஜ், நடிகைகள் கவுதமி, திவ்யதர்ஷினி, மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கமலுக்கு முத்தமிட்ட நடுத்தர வயது பெண் மற்றும் இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பிய விஜய் டி.வி. நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 14வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இரு இளைஞர்கள் கைது
Next post நுவரெலியா பத்தனையில் சடலம் மீட்பு