நுவரெலியா பத்தனையில் சடலம் மீட்பு
நுவரெலியா, பத்தனை பகுதியில் உள்ள பள்ளம் ஒன்றில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் விபத்துக்குள்ளான ஆட்டோ ஒன்றின் சாரதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த ஆட்டோ எப்போது விபத்துக்குள்ளானது என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை.
இன்றுகாலை விறகு தேடச் சென்றவர்களால் குறித்த சடலம் குறித்து காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, காவற்துறையினர் அதனை மீட்டுள்ளனர்.
இது தொடர்பில் பத்தனை காவற்துறையிடம் எமது செய்திப்பிரிவு தொடர்பை ஏற்படுத்தி வினவிய போது, சம்பவ இடத்துக்கு காவற்துறை குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.