மொரட்டுவை உபதலைவருக்கு எதிர்ப்பு

Read Time:1 Minute, 40 Second

question-004மொறட்டுவ ஏகொடஉயன சுனந்தோப்பனந்தாராம விகாராதிபதி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான மொரட்டு நகரசபையின் உபதலைவர் இன்று நகரசபை அமர்வில் கலந்து கொள்ள வந்திருந்தபோது அங்கு பதற்றம் நிலவியது. நகரசபை வளாகத்தில் அவருக்கு ஆதரவு – எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் சிறை அதிகாரிகள் உடனடியாக அவரை அங்கிருந்து அழைத்துச் சென்று விட்டனர்.

மொரட்டுவ நகரசபை உபதலைவர் சுஜித் புஸ்பகுமார பிக்கு கொலை சந்தேகத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று நகரசபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள சிறைச்சாலை பஸ்ஸில் சுஜித் புஸ்பகுமார வந்தபோது, நகரசபை வளாகத்தில் கூடியிருந்த பிக்குகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதுடன் பஸ்ஸில் இருந்து கீழே இறங்க அவருக்கு இடமளிக்கவில்லை.

இந்த சந்தர்ப்பத்தில் உபதலைவரின் ஆதரவாளர்களும் குறித்த இடத்தில் கூடியிருந்ததால் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து அவர் மீண்டும் சிறைச்சாலைக்கே அழைத்துச் செல்லப்பட்டார்.

இதனால் மொரட்டுவ நகரசபை நடவடிக்கைகளை இன்று உரிய நேரத்திற்கு ஆரம்பிக்க முடியாது போனதாக தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேலாடையின்றி முடிவெட்டும் கவர்ச்சிப் பெண்கள்!! (PHOTOS)
Next post 5 மில்லியன் ரூபா மோசடி வழக்கில் பவர் ஸ்டார் கைது