இன்றைய ராசிபலன்கள்: 27.04.2013

Read Time:9 Minute, 0 Second

jot.Rasi_Palan
இன்றைய ராசிபலன்கள்:27.04.2013
மேஷம்
காலை 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்கள் பார்க்க வேண்டி வரும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிரே

ரிஷபம்
நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப் படுவீர்கள். கணவ – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் நன்மை பிறக்கும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகளை விரைந்து வசூலிப்பீர்கள். தாயாரின் உடல்நிலை சீராக இருக்கும். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

மிதுனம்
இன்றையதினம் சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படை வீர்கள். சிந்தனைத்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப் பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல் நலம் சீராக இருக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களைச் சந்திப்பீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலைக் காணப்படும். மாணவர்கள் பரபரப்புடன் காணப்படுவார்கள். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, நீலம்

கடகம்
துடிப்புடன் காணப்படுவீர்கள். எதிரிகளின் கொட்டம் அடங்கும். கணவன் – மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. விருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் மதிக்கப்படுவீர்கள். முன்கோபம் குறையும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தாயாரின் நீண்டநாள் கோரிக்கைகளை பூர்த்தி செய்வீர்கள். கன்னிப்பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, மயில் நீலம்

சிம்மம்
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். குடும்பத்தினருடன் இருந்துவந்த கசப்புணர்வு நீங்கும். கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஒத்துழைப்பு உண்டு. வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். கன்னிப்பெண்களுக்கு கனவுத்தொல்லை, தூக்கமின்மை நீங்கும். மாணவர்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், மஞ்சள்

கன்னி
பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வாகனச் செலவுகள் நீங்கும். மாணவர்களின் நினைவாற்றல் பெருகும். கன்னிப்பெண்களுக்கு கல்யாணப்பேச்சு வார்த்தைகள் முன்னேற்றம் தருவதாக அமையும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், ப்ரவுன்

துலாம்
காலை 9 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் குடும்பத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. நட்பு வட்டம் விரியும். புது முதலீடுகள் செய்யலாம். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : வைலெட், இளஞ்சிவப்பு

விருச்சிகம்
காலை 9 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். கணவன் – மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். சாதாரணமாக பேசுவதைக் கூட சிலர் குதர்க்கமாக புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

தனுசு
இன்றையதினம் கடினமாக உழைக்க வேண்டி வரும். எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துப் போகும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், பிங்க்

மகரம்
மனக்குழப்பங்கள் நீங்கும். நம்பிக்கைக்குறியவர்களின் ஆதரவு கிட்டு. தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கோபம் குறையும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். கன்னிப்பெண்களுக்கு காதல் கைகூடும். வயிற்றுவலி, கனவுத்தொல்லை நீங்கும். மாணவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ப்ரவுன்

கும்பம்
இன்றையதினம் அதிரடியாக செயல்பட்டு சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பணவரவு உண்டு. வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசாங்க காரியங்களில் வெற்றியுண்டு. மாணவர்களின் சிந்தனைத்திறன் அதிகரிக்கும். தாயின் உடல்நிலை சீராகும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, பச்சை

மீனம்
காலை 9 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் ஏற்படும். பிற்பகல் முதல் கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அரசாங்க வேலைகளில் அனுகூலமான நிலைக் காணப்படும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வெளிவட்டாரத் தில் மதிக்கப்படுவீர்கள். பயணங்கள் மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ப்ரவுன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேலுமொரு தொகுதியினர் அவுஸ்திரேலியாவிலிருநந்து நாடு திரும்புகின்றனர்
Next post ரூ.50 லட்சம் மோசடி வழக்கில் பவர் ஸ்டார் கைது