ரூ.50 லட்சம் மோசடி வழக்கில் பவர் ஸ்டார் கைது
ரூ. 50 லட்சம் செக் மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆந்திராவைச் சேர்ந்த தொழில் அதிபர் ரங்கநாதன் என்பவரிடம் இருந்து நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ரூ.50 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால் பவர் கொடுத்த காசோலையை ரங்கநாதன் வங்கியில் போட்ட போது அது திரும்பி வந்தது. இதையடுத்து அவர் பவர் ஸ்டார் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.அவரது புகாரின்பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சென்னை அண்ணா நகரில் உள்ள பவர் ஸ்டார் வீட்டுக்கு இன்று சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.மோசடி வழக்கில் பவர் ஸ்டார் கைது செய்யப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.