கிழக்கு மாகாணச் செய்திகள்….

Read Time:2 Minute, 46 Second

kilakku.jpgமட்டக்களப்பு குமாரபுரம் புன்னைச்சோலையில் இன்று பகல் 1.00 மணியளவில் தங்கவேல் ரஞ்சன் (26) என்பவர் வீட்டிலிருந்து வெளியில் வரும் போது மோட்டார் சைக்கிளில் வந்த புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்;. இவரின் சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளார். இவர் பல வருடங்களுக்கு முன்னர் ராசிக் அணியில் செயற்பட்டு பின்னர் சிவில் வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என தெரிய வருகிறது. அரபு நாடொன்றில் தொழில் புரிந்து விட்டு கடந்த மூன்றுமாதத்துக்கு முன்னர்தான் தனது வீட்டிற்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு செங்கலடி குமாரவேலியார் கிராமத்தில் நேற்றிரவு பொன்னையா புலேந்திரன் (20)என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் வீட்டிலிருந்தபோது விசாரணைக்கென வெளியே அழைத்து இவரை சுட்டுக் கொன்றுள்ளனர்.

மட்டக்களப்பு வாழைச்சேனை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அமைந்திருந்து அரச சார்பற்ற நிறுவனமான ஜி.ரி.இசட்(புவுணு) இற்கு வந்த ஆயுதம் தாங்கிய புலிகள் அங்கிருந்த காவலாளியை தாக்கி, காரியாலயத்தை உடைத்து அங்குள்ள கம்யூட்டர்கள், மற்றும் ஏனைய பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மட்டக்களப்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களான கன்னங்குடா, கோரகல்லிமடு ஆகிய இடங்களில் இடம்பெற்ற கண்ணகி அம்மன் குளிர்த்தீ திருவிழா நிறைவுபெற்ற தினத்தன்று அங்கு சிறுவர் சிறுமியர், இளைஞர்களை புலிகள் பலாத்காரமாக தங்கள் வாகனங்களில் கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

திருகோணமலை அனுராதபுரச் சந்தியில் இன்று (13-06-2006) காலை 8.45 மணியளவில் இராணுவத்தினர் மீது புலிகளால் கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் இரண்டு இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பாராளுமன்ற கட்டிடம், பிரதமர் அலுவலகம் தீவைப்பு: பாலஸ்தீனத்தில் உள்நாட்டு போர்
Next post பாகிஸ்தானில் ஓட்டலில் குண்டு வெடித்து 5 பேர் பலி 17 பேர் காயம்