இளம்பெண்ணுடன் கள்ளத்தொடர்பு பட்டறை ஊழியருக்கு வெட்டு: கணவன் கைது
பெரவள்ளூர் வெற்றி நகரை சேர்ந்தவர் ராம்கணேஷ் (23). லேத் பட்டறையில் வேலை செய்கிறார். கடந்த வெள்ளியன்று வீட்டருகே பைக்கில் சென்றுகொண்டு இருந்தவரை 3 பேர் மறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.
தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிந்து கொளத்தூர் சுந்தர் (32), திருவிக நகர் வேலு என்ற வேலாயுதம் (20), ஆவடி பிரகாஷ் (24) ஆகியோரை கைது செய்தனர்.
சுந்தரின் மனைவிக்கும் ராம்கணேஷுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதுதெரிந்து இருவரையும் சுந்தர் கண்டித்துள்ளார். வீட்டை காலி செய்துவிட்டு மனைவியுடன் வேறு இடத்துக்கு சென்றுள்ளார். அங்கும் அவர்கள் தொடர்பு நீடித்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுந்தர், நண்பர்களுடன் சேர்ந்து ராம்கணேஷை வெட்டியது தெரியவந்துள்ளது.