தனுஷ் தயாரிக்கும் ‘எதிர்நீச்சல்’ படக் கதை + ஸ்பெஷல் ஆல்பம்(PHOTOS)
நடிகர் தனுஷ், ’எதிர் நீச்சல் என்ற பெயரில் முதன்முதலாக சொந்த படம் தயாரித்து இருக்கிறார். இதில், சிவகார்த்திக்கேயன் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். ப்ரியா ஆனந்த், நந்திதா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
இந்த படத்தின் கதை இதுதான்:
ஒரு நடுத்தர வர்க்கத்து சராசரி இளைஞனின் தினசரி வாழ்க்கையில் நடக்கும் பிரச்சினைகள்தான் ’எதிர் நீச்சல் படத்தின் கதை. கதாநாயகன் சிவகார்த்திக்கேயன் ஓட்டப் பந்தய வீரராக வருகிறார். ப்ரியா ஆனந்த் பள்ளிக்கூட ஆசிரியையாகவும், நந்திதா வீராங்கனையாகவும் வருகிறார்கள்.
இந்த படத்தில் அதன் தயாரிப்பாளர் தனுஷ் நடிக்கவில்லை என்றாலும் ஒரே ஒரு பாடல் காட்சியில் மட்டும் நடனம் ஆடியிருக்கிறார். அவருடன் நயன்தாரா ஜோடியாக ஆடியிருக்கிறார்.’