உலகக் கோப்பை : ஆடியது டோகோ! வென்றது கொரியா!

Read Time:2 Minute, 7 Second

W.Football.jpgஉலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் இன்று ஜி பிரிவில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆப்ரிக்க அணியான டோகோவை 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரிய அணி வென்றது! ஆட்டத்தின் துவக்கம் முதல் மிகச் சிறப்பாக ஆடிய டோகோ அணி, பல வாய்ப்புகளை தவறவிட்டது. 31வது நிமிடத்தில் டி-க்கு சற்று வெளியே பந்தைப் பெற்ற டோகோ அணியின் முன்கள வீரர் மொஹம்மது காதர் அடித்த அற்புதமான ஷாட் டோகோவிற்கு முன்னிலையைத் தந்தது. காதர் அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு கோலிற்குள் புகுந்தது.

இடைவேளைக்குப் பிறகு தனது திறனை முழுமையாக வெளிப்படுத்திய தென் கொரிய அணி, டோகோ அணி வீரர்களின் முன்னேற்றத்தை முற்றிலுமாக தடுத்து நிறுத்தியது.

54வது நிமிடத்தில் டி-க்கு வெளியே கிடைத்த ஃபிரீ கpக்கை கோலாக்கினார் தென் கொரிய அணியின் அனுபவமிக்க லீ சுன் சூ. டோகோ வீரர்களின் தடுப்பாட்டச் சுவரை தொடாமல் மேல் நோக்கி பந்தை அடித்தார் லீ சுன் சூ. அது வளைந்து சென்று கோலியின் கையில் சிக்காமல் கோலிற்குள் புகுந்தது.

கொரியா முதல் கோலை போடுவதற்கு முன் அதேபோன்றதொரு வாய்ப்பு டோகோ அணிக்கு கிடைத்தது. ஆனால் அதனை கொரிய கோலி அருமையாக மேலே தட்டிவிட்டார்.

72வது நிமிடத்தில் ஆன் ஜுங் ஹூவான் டி-க்கு வெளியில் இருந்து அடித்த பந்து கோலியின் கைக்கு எட்டாமலேயே கோலிற்குள் புகுந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பாகிஸ்தானில் ஓட்டலில் குண்டு வெடித்து 5 பேர் பலி 17 பேர் காயம்
Next post முல்லா உமர் உறவினர் உள்பட தலிபான் தீவிரவாதிகள் 37 பேர் சாவு