மீண்டும் கோடம்பாக்கத்துக்கு வந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்!
ஸ்லம்டாக் மில்லினியர் என்ற ஹாலிவுட் படத்துக்கு இசையமைத்து ஆஸ்கர் விருது பெற்றவர் ஏ.ஆர்.ரஹ்மான்.
அதன்பிறகு அவருக்கு தொடர்ந்து ஹாலிவுட் பட வாய்ப்புகள் கிடைத்ததால், தமிழ்ப்படங்களை குறைத்து விட்டு அங்குள்ள படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வந்தார். அதனால் சில ஆண்டுகளாக அமெரிக்காவிலேயே தங்கி விட்டார் ரஹ்மான்.
ஆனால், சமீபகாலமாக அவருக்கு அங்கு படவாய்ப்புகள் குறைந்து வருகிறதாம். அதனால், மீண்டும் தமிழில் அதிக படங்களுக்கு இசையமைப்பதில் கவனத்தை திருப்பியிருக்கிறார்.
தற்போது ரஜினியின் கோச்சடையான், தனுஷின் மரியான் உள்பட சில படங்களுக்கு இசையமைத்து வருபவர், இனிமேல் சென்னையில் இருந்தபடியே தமிழ்ப்படங்களுக்கு இசையமைக்கப்போகிறாராம்.
மேலும் என்னதான், ஹாலிவுட் உள்பட பல மொழிப்படங்களுக்கு இசையமைத்தாலும் தாய்மொழியான தமிழில் இசையமைப்பதில்தான் எனக்கு அதிக ஆர்வம் என்றும் கூறியுள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.