யாருடா மகேஷ் !!

Read Time:4 Minute, 14 Second

yaruda_mahesh_04“யாருடா மகேஷ்” படத்தின் தலைப்பைப் போன்றே வித்தியாசமும், விறுவிறுப்புமான கதையம்சத்துடன் வெளிவந்திருக்கும் இப்படமும், இதன் காட்சியமைப்புகளும் “யாருடா இந்தப்படத்தின் இயக்குனர் என்று கேட்க வைக்கும் ரகமென்றால் மிகையல்ல.

கதைப்படி சோம்பேறி கதாபாத்திரமான சிவா என்னும் சந்தீப்புக்கு, தன் கல்லூரியில் படிக்கும் சிந்தியா எனும் டிம்பள் மீது காதல்.

நண்பன் வசந்த் எனும் செம்புலி, ஜெகனின் காதலி உதவியுடன் டிம்பளை உஷார் பண்ணும் சந்தீப், கல்லூரி இறுதி தேர்வில் பத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறாமல் போகிறார்.

அவரது காதலி, டிம்பளோ கல்லூரியின் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று அடுத்த விமானத்திலேயே அமெரிக்கா பறக்கிறார்.

இதில் அதிச்சியாகும் சந்தீப், அரியர்ஸை கிளியர் செய்து அடுத்த ஆறு மாதத்திற்குள் அமெரிக்கா போய் காதல் வளர்ப்பார் எனப் பார்த்தால், ஆறு வாரத்திற்குள்ளாகவே அமெரிக்காவில் இருந்து டிம்பள் ரிட்டர்ன் ஆகிறார். காரணம், சந்தீப்பின் கரு, டிம்பளின் வயிற்றில் வளருவது தான்.

அச்சச்சோ, அப்புறம்? அப்புறமென்ன…? நாயகன், நாயகியின் அப்பா-அம்மாக்கள் ஆரம்பத்தில் ஈகோ மோதலில் இறங்கி, அதன் பின்னர் வேறு வழியின்றி சம்மந்தி ஆகின்றனர். குழந்தை பிறக்கிறது.

குழந்தையோடு, குழந்தையாக விளையாடியபடி காலத்தை தள்ளும் நாயகன் சந்தீப்பை திருத்த, நாயகி டிம்பள் தன் கஸின் பிரதரும், மனநல மருத்துவருமான ஸ்ரீநாத்துடன் சேர்ந்து கொண்டு செய்யும் அதிர்ச்சி வைத்தியம் தான் “யாருடா மகேஷ்” படத்தின் அதிர்ச்சியும், ஆச்சர்யமான, கலகலப்பும், கலாய்ப்புமான மீதிக்கதை.

சிவா என்னும் கதாப்பாத்திரத்தில் சந்தீப், தனது முந்தைய படமான “மறந்தேன் மன்னித்தேன்” படத்தை காட்டிலும், “யாருடா மகேஷ்” படத்தில் யாருடா சந்தீப் எனக் கேட்கும் அளவிற்கு கேஸீவலாக நடித்து ஜொலித்திருக்கிறார்.

டிம்பள் செமயூத்புல், கிளாமர் அப்பீல்… இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவர், நயன்தாரா, காஜல் அகர்வாலை எல்லாம் கூடிய விரைவில் ஓரங்கட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

நம் கண்களுக்கு மட்டுமல்ல, தன் கண்களிலும் எத்தனை கவர்ச்சி விருந்து வைக்கிறார்.

நாயகன் நண்பர் வசந்தாக வரும் செம்புலி ஜகன் இனி, டபுள்மீனிங் ஜகன். மனநல மருத்துவராக வரும் ‌கொமெடி ஸ்ரீநாத், மகனிடம் மேற்படி சி.டி. கேட்கும் நாயகனின் அப்பா லிவிங்ஸ்டன், அம்மா உமா பத்மநாபன், சுவாமிநாதன், சிங்கமுத்து உள்ளிட்ட எல்லோரும் “யாருடா மகேஷ்” படத்தை தங்கள் கலர்புல் கொமெடிகள் மூலம் தூக்கி நிறுத்தியிருக்கின்றனர்.

புதியவர் கோபிசுந்தரின் புதுமையான இசையும், ராணாவின் இனிமையான ஒளிப்பதிவும், சத்தியநாராயணனின் பளிச் படத்தொகுப்பும், ரா.மதன்குமாரின் எழுத்து-இயக்கத்தில், “யாருடா மகேஷ்” படத்தை மீண்டும் ஒருமுறை “பாருடா” என்று நம்மை தூண்டி விடுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிங்க் நிற பிகினியில் மனசைக் கொள்ளைகொள்ளும் ஸ்பெயின் நாட்டு அழகி!!(PHOTOS)
Next post உள்ளாடை விளம்பரத்தில் தனது திறமையைக் காட்டிய நடிகை!!