நற்பிட்டிமுனை நூலகம் விசமிகளால் தீக்கிரை
அம்பாறை, கல்முனை, நற்பிட்டிமுனை சிவசக்தி வித்தியாலயத்துடன் இணைந்து நற்பிட்டிமுனை கல்வி அபிவிருத்தி சங்கத்தினால் நாடத்தப்பட்டு வந்த மாணவர்களுக்கான நூலகம் நேற்று இரவு விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இவ் நூலகம் நற்பிட்டிமுனை தமிழ் முஸ்லிம் கிராம எல்லையில் அமைந்துள்ளதுடன், இவ் நூலகத்தில் இருந்த 300க்கும் மேற்பட்ட புத்தகங்களும் எரிக்கப்பட்டுள்ளதுடன், 2 மின் விசிறிகளும், 2 சக்கர நாற்காலிகளும் திருடப்படும், ஜன்னல்கள் உடைக்கப்படும் இருந்தது.
இச்சம்பவம் நற்பிட்டிமுனை தமிழ் மக்களை ஆழ்ந்த கவலைக்கு உள்ளாக்கியுள்ளதுடன், இந் நூலகம் மூலம் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.