பிரித்தானிய மகாராணி இலங்கை வர மாட்டார்!!

Read Time:1 Minute, 45 Second

ShowImageஇலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாட்டுத் தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய மகாராணி பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1973ம் ஆண்டுக்குப் பின்னர் பிரித்தானிய மகாராணி முதல் தடவை பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்காமல் இருக்கப் போகிறார் என ஸ்கை செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

மகாராணிக்கு பதிலாக பிரித்தானிய அரசர் சால்ஸ் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் மகாராணி கலந்து கொள்ளாமைக்கு தெளிவான காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

எனினும் மகாராணி தனது அதிகாரங்களை மகனுக்கு விட்டுக் கொடுக்கும் திட்டமாக இது இருக்கலாம் என விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் மோசமாக இருப்பதால் பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டை வெளிநாடுகள் புறக்கணிக்க வேண்டும் எனவும் மகாராணி இதில் பங்கேற்க கூடாது எனவும் தொடர்ச்சியாக அழுத்தங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் பிரித்தானிய மகாராணியின் செய்தி வெளியாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வான்கடே மைதானத்தில் நுழைய தடை நீடிப்பு : ஷாருக்கான் வருத்தம்!!
Next post நவீன கோவணம்: ஒற்றைத் துணியில் ஜட்டி!! (PHOTOS)