புலிகளின் 100 கிலோ தங்கம் கள்ள சந்தையில்!!

Read Time:3 Minute, 15 Second

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த தங்கத்தின் ஒரு பகுதியுடன் 11 பேர் பேலியகொட பொலிஸாரால் கடந்த நாட்களில் பிடிக்கப்பட்டு உள்ளனர்.

இலங்கை கிறிக்கெற் அணியின் உப தலைவராக இருந்த ரோய் டயஸின் மனைவி சண்டமாலி தரங்க டயஸ், ஓய்வு பெற்ற உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிறி லால் ஆனந்தராஜ் ரணசிங்க ஆகியோர் இவர்களில் மிக முக்கியமானவர்கள். கடல் படை உத்தியோகத்தர்கள் இருவரும் இவர்களில் அடக்கம்.

தங்கத்தின் எடை 100 கிலோ. 5000 இலட்சத்துக்கு விற்க முயன்று இருக்கின்றனர். அரசிடம் பணம் இல்லை, எவரும் வாங்கலாம் என்ரூ சொல்லியே விற்க பார்த்தனர்.

இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இவர்களை கையும், களவுமாக பிடிக்க அதிரடி மேற்கொண்டனர்.

தங்கம் விற்பனைக்கு என விளம்பரப்படுத்தப்பட்டபோது பொலிஸ் குழு ஒன்று வர்த்தகர்கள் போல் மாறுவேடம் பூண்டது. கிறிக்கெற் வீரரின் மனைவியுடன் வியாபாரம் பேசியது.

barsவியாபாரத்தை பேசி, முடிக்க ரொக்கப் பணத்துடன் வீட்டுக்கு கட்டாயம் வந்தாக வேண்டும் என்று இவர்களுக்கு சொல்லி இருக்கின்றார் அம்மணி.

ஆனால் வீட்டுக்கு எல்லாம் வர முடியாது, ஹோட்டலுக்கு வரலாம் என்று புத்தி சாதுரியமாக பொலிஸார் பேசி இருக்கின்றனர்.

இவர்களை சந்திக்க ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு இப்பெண் வந்து இருக்கின்றார். ஒரு இலட்சம் ரூபாய் போலி கட்டுடன் இவர்களும் வந்திருந்தனர். இவர்கள் பணத்தை கொடுத்தனர்.

தங்கம் கையளிக்கப்படுகின்ற பதிலுக்கு காசோலை கொடுத்தார் கிறிக்கெற் வீரரின் மனைவி. இவ்வளவும் இடம்பெற்றபோது கும்பலைச் சேர்ந்த இன்னும் மூவரும் கூடவே காணப்பட்டனர்.

உடனடியாக பொலிஸார் கிறிக்கெற் வீரரின் மனைவியை கைது செய்தனர். தொடர்ந்து இக்கும்பலோடு தொடர்புடைய பலரும் பிடிக்கப்பட்டனர். இன்னும் பலர் பிடிக்கப்பட இருக்கின்றனர். குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிதான்.

பிடிக்கப்பட்டவர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் போடப்பட்டு, பின்னர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

கிறிக்கெற் வீரர் டயஸ் தற்போது மலேசியாவில் பயிற்றுவிப்பாளராக கடமை ஆற்றி வருகின்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பின்பக்கக் கவர்ச்சி: பின்புறத்தில் பச்சைகுத்திக் கொண்ட 17 பிரபலங்களிள் tattooக்கள்!!(PHOTOS)
Next post சுற்றுலா வந்தபோது வெளியில் தெரிந்த ஜெசிக்கா அல்பாவின் மார்புக் காம்பு!!(PHOTOS)