எனது திருமண செய்தி வெறும் வதந்திதான்! ரம்யா நம்பீசன்!!
பீட்சா படத்தில் விஜயசேதுபதியின் காதலியாக நடித்த ரம்யா நம்பீசன், விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால், அவரோ அதை மறுக்கிறார். எனக்கு வேண்டாத யாரோதான் இப்படி செய்தியை கொளுத்திப்போட்டுள்ளனர். நான் பார்க்கத்தான் பெரிய ஆளாட்டம் இருப்பேன். ஆனால், ரொம்ப சின்னப்பெண் என்று விளக்கம் கொடுத்து வருகிறார்.
மேலும், தற்போது விமலுடன் ரெண்டாவது படம் என்ற படத்தில் நடித்து வரும் எனக்கு மேலும் சில படங்கள் புக்காகி உள்ளன. அதனால், தமிழில் இன்னும் அதிக படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்.
அதன்காரணமாக, எனது உடல் எடையை குறைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளேன் என்று சொல்லும் ரம்யா நம்பீசன், இதுவரை கிளாமர் அல்லாத கதைகளிலேயே நடித்துள்ள நான், தேவையான கிளாமரை வெளிப்படுத்தி நடிக்கவும் தயாராகி விட்டேன். அதனால் இனி கமர்சியல் கதைகளுக்கு முதலிடம் கொடுத்து நடிக்கப்போகிறேன் என்கிறார்.
Average Rating