பெண்கள் சிகரெட் பிடிப்பது…மது குடிப்பதெல்லாம் வடஇந்தியாவில் ரொம்ப சகஜம்.”.- சனாகான் அடுத்த அதிரடி!!(PHOTOS)

Read Time:3 Minute, 31 Second


2224இந்தி நடிகைகளில் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது ‘சிலம்பாட்டம்’ நாயகி சனாகானுக்கு சகஜம். ஏற்கனவே ‘வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளும் நடிகைகள்’ என அதிரடி திரியை கொளுத்திப்போட்டு நடிகைகள் சாபத்திற்கு ஆளானவர்…

இப்போது சிகரெட் & மது எல்லாம் வட இந்திய பெண்களுக்கு சகஜம் என அடுத்த அதிரடி திரியை கொளுத்தியிருக்கிறார்… இவர் தற்போது தமிழ் பிரபல கவர்ச்சி நடிகை சிலுக்குவின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ‘நடிகையின் டைரி’ படத்திற்காக சிகரெட் பிடித்தபடியே மது குடிப்பது போன்ற காட்சியை இயக்குனர் வைத்திருந்தார்.

இந்த காட்சியில் நடிப்பதற்கு எப்படியும் சனாகான் பல ‘டேக்’ வாங்குவார் என இயக்குனர் உட்பட யூனிட் நினைத்திருக்க… சனாகானோ அந்த காட்சியை ஒரே டேக்கில் ஓகே செய்ததோடு… சிகரெட் புகையை வளைம் வளையமாக வேறு வெளியே விட்டு அடுத்த காட்சியை அவரே நடித்துக் கொடுத்திருக்கிறார்…

பொதுவாகவே பழக்கம் இல்லாதவர்கள் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மறுப்பார்கள்… அதோடு பெண்கள் சிகரெட் பிடிப்பதுபோன்ற காட்சிகளில் நடிப்பதே அபூர்வம்… எல்லாவற்றிக்கும் மேலாக முதல்முறையாக சிகரெட் பிடிப்பவர்களுக்கு இருமல்… தொண்டை எரிச்சல் என பல விஷயங்களில் அவதிபடுவார்கள்…

ஆனால், இந்த காட்சியை படமாக்கும்போது சனாகான் அப்படி எந்த சிரமத்திற்குள் ஆளாகவில்லையாம். அதோடு, ரொம்ப சாதாரணமாக இந்த காட்சியில் நடித்ததால் அவருக்கு ஏற்கனவே சிகரெட்&மது பழக்கம் இருக்குமோ என அவரிடம் கேட்டால்…” பெண்கள் சிகரெட் பிடிப்பதும், மது குடிப்பதையும் இங்கே பெரிய விஷயமாக பார்க்கிறார்கள்… வட இந்தியாவில் இதெல்லாம் ரொம்ப சகஜமான ஒன்று. அதிலும் குறிப்பாக நடிகைகள் சினிமாவுக்காக இதை கற்றுக் கொண்டிருப்பார்கள்… நடிக்க வந்த பிறகு அந்த காட்சியின் தேவைக்காக அப்படி நடிப்பதில் தவறு இல்லை. நான் சினிமாவுக்காவே சிகரெட் பிடிக்க கற்றுக் கொண்டேன்… மற்றபடி சிகரெட் வாசனை எனக்கு சுத்தமாக பிடிக்காது” என்கிறார் சனாகான்.

இந்த நடிகையின் டைரி படம் தமிழில் மே 24ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்தபடத்தில் சனாகான் நடிப்புக்காக கண்டிப்பாக விருது நிச்சயம் என அவருக்கு நெருக்கமானவர்கள் பாராட்டியிருப்பதால் சனாகான் ரொம்ப உற்சாகமாக இருக்கிறார்.222622242219

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நான்கு வயது சிறுவன்மூலம் பாலியல் திருப்தி பெற்ற 59 வயது பெண் கைது!!
Next post பாப்பரசர் வேடமணிந்து ஆணுறை விநியோகித்த மாணவி கைது!!