பாப்பரசர் வேடமணிந்து ஆணுறை விநியோகித்த மாணவி கைது!!
பாப்பரசர் போன்று வேடமணிந்து அலங்கோலமாக நடந்துகொண்ட பல்கலைக்கழக மாணவியொருவரை அமெரிக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.அமெரிக்காவின் கார்னீஸ் மெலோன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்த மாணவி, கடந்த மாதம் பாப்பரசர் போன்று கிரீடம் அணிந்துகொண்டு இடுப்பு கீழ் ஆடையணியாமல் காணப்பட்டார்.
அத்துடன் சிகரெட்டும் புகைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு ஆணுறைகளை விநியோகித்துக் கொண்டிருந்தார். இது தொடர்பாக பிட்ஸ்பர்க் மறைமாவட்டத்தின் கத்தோலிக்க ஆயர் ஒருவர் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து 19 வயதான மேற்படி மாணவியை பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.
பொது இடத்தில் அநாகரீகமான முறையில் நடந்துகொண்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.