By 14 May 2013 0 Comments

நாயகனாகும் கொலவெறி அனிருத்!!

images (1)தமிழ் திரை உலகம் சமீபமாக தழைத்து நிற்பதற்கு புதிய வித்தியாசமான சிந்தனை உள்ள தயாரிப்பாளர்கள் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

காதல் கலந்த நகைசுவை படங்கள் நிறைய வெற்றி பெற்றாலும், அதில் சில படங்களே பெரும் பொருட்செலவில் தயாராகிறது.

இந்தியில் தயாராகும் படங்களை போல தமிழிலும் வண்ணம் ஒளிர வரும் திரை படங்கள் குறைவு தான் அத்தகைய படங்களை தயாரிக்கும் R.S. INFOTAINMENT நிறுவனத்தின் சார்பில் எல்ரெட் குமார்- ஜெயராமன் கூட்டணி தங்களது நிறுவனத்துக்கு தனித்துவம் கிடைக்கும் வகையில் கொலிவுட்டில் பெரிய பட பேனர் தயாரிப்பாளராக வலம் வருகிறார்.

விண்ணை தாண்டி வருவாயா, முப்பொழுதும் உன் கற்பனைகள், நீதானே என் பொன் வசந்தம், தற்போது யான் என்று பல்வேறுப்பட்ட கதை களங்களில் உள்ள படங்களை தயாரித்த இந்த நிறுவனம் தற்போது எல்ரெட் குமார் தயாரித்து இயக்க உள்ள நகைச்சுவை கலந்த காதல் படத்துக்கு கதாநாயகனாக கொலவெறி புகழ் இசையமைப்பாளர் அனிருத்தை ஒப்பந்தம் செய்துள்ளதாக பட வட்டாரத்தில் தகவல் பரவியுள்ளது.

நாயகனாக நடிக்கப்போவதாக சமீபத்தில் நடந்த விஜய் அவார்ட்ஸ் மேடையில் கூட அனிருத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

Protected by WP Anti Spam