By 14 May 2013 0 Comments

காமக் களியாட்டங்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் புங்கா பார்ட்டி அரங்கை பகிரங்கமாக்கினார் இத்தாலிய முன்னாள் பிரதமர் பேர்­லுஸ்­கோனி!!

704berlusஇத்­தா­லிய முன்னாள் பிர­த­ம­ரான சில்­வியோ பேர்­லுஸ்­கோனி, தான் பாலியல் கேளிக்கை விருந்­து­களை நடத்­தி­ய­தாக கூறப்­பட்ட தனது மாளி­கையின் பிரத்­தி­யேக அரங்­கிற்குள் முதல் தட­வை­யாக செய்தி நிறு­வ­னங்­களின் படப்­பி­டிப்­பா­ளர்­களை அனு­ம­தித்­துள்ளார். 77 வய­தான சில்­வியோ பேர்­லுஸ்­கோனி இத்­தா­லியின் மிகப்­பொ­ரிய கோடீஸ்­வ­ரர்­களில் ஒருவர். அவ­ருக்கு சொந்­த­மாக ஊடக நிறு­வ­ன­மொன்றும் உள்­ளது. மூன்று தட­வைகள் இத்­தா­லிய பிர­த­ம­ராக பதவி வகித்­தவர் அவர். 1994-2000, 2001,-2006, 2008 ஆகிய காலப்­ப­கு­திகளில் அவர் பிர­தமர் பத­வி­யி­லி­ருந்தார்.

அடிக்­கடி ஆட்சி மாறு­வது இத்­தாலியில் வழக்கம். இந்­நி­லையில் இரண்டாம் உலக யுத்­தத்­துக்கு பின்­ன­ரான காலத்தில் நீண்­ட­காலம் பத­வி­யி­லி­ருந்த பிர­தமர் எனும் பெரு­மையும் அவருக்­குள்­ளது. 590 கோடி அமெ­ரிக்க டொலர் சொத்­துக்­களைக் கொண்ட பேர்­லுஸ்­கோனி உலகின் 169 ஆவது பெரும் செல்­வந்தர் என போர்ப்ஸ் சஞ்­சிகை 2012 ஆம் ஆண்டில் தெரி­வித்­தி­ருந்­தது. விளையாட்­டுக்­களில் தீவிர ஈடு­பாடு கொண்ட பேர்­லுஸ்­கோனி, இத்­தா­லியின் முன்­னிலை கால்­பந்­தாட்டக் கழ­கங்­களில் ஒன்­றான ஏ.சி. மிலானின் உரி­மை­யா­ளரும் ஆவார்.ஆனால், செக்ஸ் விளை­யாட்­டுக்­க­ளிலும் பேர்­லுஸ்­கோனி அதிக ஈடு­பாடு கொண்­டி­ருந்­தமை அவரின் பத­விக்கு நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­யது.

இரு தடவை திரு­ம­ண­மாகி விவ­கா­ரத்­தான சில்­வியோ பேர்­லுஸ்­கோனி தனது மாளி­கையில் விருந்­துகள் என்ற பெயரில் காமக்­க­ளி­யாட்­டங்­களை நடத்­தி­ய­தாக குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்­டன. ‘புங்கா புங்கா பார்ட்­டிகள்’ என இந்­நி­கழ்ச்­சிகள் குறிப்­பி­டப்­பட்­டன. அதே­வேளை, மொரோக்­கோவைச் சேர்ந்த இரவு விடுதி நடன மங்கையான கரீமா எல் மஹ்ரோவ் எனும் யுவதி 18 வயதை அடை­வ­தற்கு முன் அவ­ருடன் விபச்­சா­ரத்தில் ஈடு­பட்­ட­தாக பேர்­லுஸ்­கோனி மீது குற்றம் சுமத்­தப்­பட்­டது. 2010 பெப்­ர­வரி மற்றும் மே மாதங்­க­ளுக்கு இடையில் இச்­சம்­ப­வங்கள் இடம்­பெற்­ற­தாக கூறப்­ப­டு­கி­றது. அப்­போது கரீமா எல் மஹ்­ஹேராக் 17 வய­தா­ன­வ­ராக இருந்தார்.

ரூபி ருபா­கோ­கி­யோரி எனும் பெயரில் நடன நிகழ்ச்­சி­களில் பங்­குற்­றிய கரீமா எல் மஹ்­ரோவ்­விடம் பாலியல் சேவைக்­காக பணம் செலுத்­திய குற்­றச்­சாட்டு தொடர்­பான வழக்கை சில்­வியோ பேர்­லுஸ்­கோனி எதிர்­கொண்­டுள்ளார். கரீமா எல் மஹ்­ரோ­வுடன் சில்­வியோ பேர்­லுஸ்­கோனி சம்­பந்­தப்­பட்­டுள்ள விவ­காரம் அம்­ப­ல­மான கதை சுவா­ரஷ்­ய­மா­னது. 2010 மே 27 ஆம் திகதி பல்­லா­யி­ரக்­க­ணக்­கான யூரோ பணத்தை திரு­டிய குற்­றச்­சாட்டில் இத்­தா­லிய மிலான் நகர பொலி­ஸாரால் எல் மெஹ்ரோவ் கைது செய்­யப்­பட்டார்.

அவ­ரிடம் எந்த அடை­யாள அட்­டையோ வேறு ஆவ­ணங்­களோ இருக்­க­வில்லை. 18 வயதை அடை­யா­தவர் ஆகையால் அவரை சிறார்­க­ளுக்­கான இல்­ல­மொன்றில் வைத்து விசா­ரிக்­கு­மாறு நீதி­பதி ஒருவர் பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்டார். அவரை பொலிஸார் விசா­ரிக்கத் தொடங்­கிய சில மணித்­தி­யா­லங்­களில் அப்­போ­தைய பிர­த­ம­ரான சில்­வியோ பேர்­லுஸ்­கோ­னி­யி­ட­மி­ருந்து மிலான் பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கு தொலை­பேசி அழைப்­பு­பொன்று வந்­தது.

அவ்­வே­ளையில் பேர்­லுஸ்­கோனி பிரான்­ஸுக்கு சுற்­றுலா மேற­கொண்­டி­ருந்தார். கரீமா அல் மஹ்ரோவ் எனும் யுவதி எகிப்தை சேர்ந்­தவர் எனவும் அப்­போ­தைய எகிப்­திய ஜனா­தி­பதி ஹொஸ்னி முபா­ரக்கின் உற­வினர் எனவும் பேர்­லுஸ்­கோனி கூறினார். ராஜ­தந்­திர சர்ச்­சை­களை தவிர்ப்­ப­தற்­காக அந்த யுவ­தியை விடு­தலை செய்­யுங்கள் எனவும் பொலி­ஸா­ருக்கு பேர்­லுஸ்­கோனி உத்­த­ர­விட்டார். பேர்­லுஸ்­கோ­னியின் தொடர்ச்­சி­யான தொலை­பேசி அழைப்­பு­களின் பின்னர் எல் மஹ்­ரோவை பொலிஸார் விடு­வித்­தனர். எல் மஹ்­ரோவ்­வுடன் இத்­தா­லிய பிர­தமர் பேர்­லுஸ்­கோனி பாலியல் உறவு கொண்டு அதற்­காக பணம் வழங்­கினார் என பிரிட்­டனின் கார்­டியன் பத்­தி­ரிகை 2010 ஒக்­டோ­பரில் செய்தி வெளி­யிட்­டது.

இதை பேர்­லுஸ்­கோனி மறுத்தார். அதே­வேளை, அப்­போது 74 வய­தா­ன­வ­ராக இருந்த பிர­த­ம­ருடன் தான் பாலியல் உறவு கொள்­ள­வில்லை எனவும் வெறு­மனே இராப்­போ­சன விருந்­து­ப­சா­ர­மொன்­றுக்­கா­கவே அவரின் மாளி­கைக்கு சென்­ற­தா­கவும் எல் மஹ்ரோவ் கூறினார். தான் பிர­த­ம­ருக்கு அருகில் அமர்ந்­தி­ருந்­தா­கவும் பின்னர், அவர் தன்னை மேல் மாடிக்கு அழைத்துச் சென்று 7000 யூரோ (சுமார் 11 இலட்சம் இலங்கை ரூபா) பணமும் நகையும் வழங்­கி­ய­தா­கவும் இத்­தா­லிய பத்­தி­ரி­கை­க­ளிடம் கரீமா எல் மஹ்ரோவ் கூறினார்.

எனினும் 18 வயதை அடை­யாத பெண்­ணுடன் விபச்­சா­ரத்தில் ஈடு­பட்­டமை, பொலி­ஸாரின் விசா­ர­ணை­களில் கடு­மை­யான தலை­யீடு செய்­தமை போன்ற குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பாக பேர்­லுஸ்­கோனி மீது விசா­ரணை ஆரம்­பிக்­கப்­பட்­டது. அதி­கார துஷ்­பி­ரயோம், பாலியல் குற்­றச்­சாட்டு, வரி மோசடி குற்­றச்­சாட்டு ஆகி­ய­வற்­றுடன் இத்­தா­லிய நிதி நெருக்­க­டியும் அதி­க­ரித்த நிலையில் 2011 நவம்பர் மாதம் பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து சில்­வியோ பேர்­லுஸ்­கோனி வில­கினார். கடந்த வருட இறு­தியில் அவர் வரி­மோ­சடி வழக்கில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்டார். எனினும் சிறைத்­தண்­டனை விதிக்கப்பட­வில்லை. அவர் மீதான ஏனைய குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பாக தற்­போது நீதி­மன்ற வழக்கு விசா­ர­ணைகள் நடை­பெ­று­கின்­றன.

இப்­போது அவர் மீது அனு­தாபம் ஏற்­ப­டுத்தும் வகையில் தயா­ரிக்­கப்­படும் விவ­ர­ணப்­ப­ட­மொன்­றுக்­கா­கத்தான் அவர் தனது தொலைக்­காட்சி நிறு­வன தொலைக்­காட்சி படப்­பி­டிப்­பா­ளர்­களை அனு­ம­தித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. அவர் மீதான குற்­ற­வியல் வழக்கில் வழக்­குத்­தொ­டு­நர்கள் தமது இறு­திக்­கட்ட வாதங்­களை நேற்று முன்­வைப்­ப­தற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் மேற்படி விவரணப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது.

2010ஆம் ஆண்டு தனது 2ஆவது மனைவியை விவாரத்து செய்த சில்வியோ பேர்லுஸ்கோனிக்கு தற்போது 27 வயதான ஒரு காதலி உள்ளார். பிரான்செஸ்கா பஸ்கால் எனும் இப்பெண்ணும் கரீமா எல் மஹ்ரோவ்வை விடுதலை செய்வதற்கு பொலிஸார் மீது அழுத்தங்களை பிரயோகித்தாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சில்வியோ பேர்லுஸ்கோனிக்கு எதிரான தற்போதைய வழக்குகளில் அவர் குற்றவாளியாக காணப்பட்டால் 15 வருடகாலம் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது..Post a Comment

Protected by WP Anti Spam