இந்தியாவின் முதல் பெண் ஜவான் தூக்கில் பிணமாகத் தொங்கினார்!!
இந்திய ராணுவத்தின் முதல் பெண் ஜவானான சாந்தி டிக்கா ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் தனது அறையில் தூக்கில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தார். இந்திய ராணுவத்தின் முதல் பெண் ஜவான் சாந்தி டிக்கா(37).
969 ரயில்வே பொறியாளர் ரெஜிமென்ட்டில் பணியாற்றி வந்தார். அவரை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்தி சல்சா அருகே ஒரு மரத்தில் கட்டிப்போட்டுவிட்டு சென்றுவிட்டனர். அவர் அப்படியே ஒரு நாள் இரவு முழுவதும் இருந்துள்ளார்.
மறுநாள் காலையில் மீட்கப்பட்ட அவர் அலிபுர்துவார் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அவர் நேற்று தனது அறையில் தூக்கில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டிக்காவின் கணவர் இறந்த பிறகு அவருக்கு கடந்த 2005ம் ஆண்டு ரயில்வேயில் பணி அளிக்கப்பட்டது. அதன் பிறகு டிக்கா தேர்வு எழுதி கடந்த 2011ம் ஆண்டு ரயில்வே பொறியாளர் ரெஜிமென்ட்டில் சேர்ந்தார்.