ஆட்டோவில் பயணம் செய்த மூதாட்டியிடம் செயின் பறிப்பு டிரைவர் உள்பட 2 பேர் கைது!!
ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணிடம் செயின் பறித்து தப்பிய டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சென்னை அரும்பாக்கம் ஜிகேஎம் காலனியை சேர்ந்தவர் சரோஜா (54). தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றுகிறார்.
கடந்த 4&ம் தேதி, செங்குன்றத்தில் இருந்து பெரம்பூருக்கு ஆட்டோவில் சென்ற சரோஜா, கதிர்வேடு பைபாஸ் சாலையில் இறங்கினார்.
பின்தொடர்ந்து சென்ற ஆட்டோ டிரைவர், சரோஜாவை வழிமறித்து, அவர் அணிந்திருந்த ஆறரை பவுன் செயினை பறித்துச் சென்றார். இதுகுறித்து புழல் போலீசில் சரோஜா புகார் செய்தார்.
வழக்கு பதிவு செய்த போலீசார், ஆட்டோ நம்பரை வைத்து விசாரித்தனர். பாடியநல்லூர் பாலமுருகன் நகர் 5&வது தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணகுமார் (31), மொண்டியம்மன் நகர் மூவேந்தர் தெருவை சேர்ந்த ஆனந்தன் (28) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
இவர்கள்தான் சரோஜாவிடம் செயின் பறித்து சென்றது தெரிந்தது. அவர்களிடம் இருந்து செயினை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.