தொழிலாளி அடித்து கொலை பார் ஊழியர் கைது!!
திருநின்றவூர் அடுத்த நடுகுத்தகை மூவேந்தர் நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கெஜராஜ் (53). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கமலா (46). கடந்த 11ம் தேதி கெஜராஜ், திருநின்றவூர் சிடிஎச் சாலை சூப்பர் மார்க¢கெட் அருகில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தினார்.
பின்னர் போதையில் வெளியே வந்த அவர் பாருக்கு வெளியே கிடந்த காலி பாட்டில்களை சேகரித்துள்ளார். இதை பட்டாபிராம் நேரு நகரை சேர்ந்த, பார் ஊழியர் சுரேஷ் (40) தட்டிகேட்டுள்ளார்.
இதில் வாக்குவாதம் முற்றி கெஜராஜை அடித்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின்பேரில் திருநின்றவூர் போலீசார், கொலை வழக்கு பதிவு செய்து, பார் ஊழியர் சுரேஷை நேற்று கைது செய்தனர்.