ரூ.3 கோடி மோசடி தனியார் நிறுவன இயக்குனர் கைது!!
வெள்ளரிக்காய்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் சூளை வரதாச்சாரி லேன் பகுதியில் உள்ளது.
இதை குஜராத் மாநிலத்தை சேர்ந்த ரஞ்சித் பி ஷா, ரன்வீர் ஷா ஆகியோர் நிர்வகிக்கின்றனர். இதில் பெங்களூரை சேர்ந்த பவன் குமார் (39) என்பவர் இயக்குனராக இருந்தார்.
இவர் போலி நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அதற்கு ஏற்றுமதி செய்ததாக கணக்கு காட்டி ஸீ 3 கோடியே 18 லட்சம் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து ரஞ்சித் பி ஷா அளித்த புகாரின்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து பவன் குமாரை நேற்று கைது செய்தனர்.